இந்தியா
Typography

 

ஆபாசம் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது. ஒருவருக்கு ஆபாசமாக தெரியும் காட்சி இன்னொருவருக்கு ஓவியமாக தெரியலாம் என கேரள உயர் நீதிமன்றம், கிருஹலட்சுமி வார இதழ் சர்ச்சை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவின் மாத்ருபூமி நாளிதழுக்கு சொந்தமான இவ்வார இதழலில், தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில் கட்டுரை வெளியானது. இதற்கு அமைவாக இதழின் அட்டைப் படத்தில் ஒரு கேரளப் பெண், குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற புகைப்படம் பிரசுரிக்கப்பட்டது.

இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இப்புகைப்படத்திற்காக மாடலாக நடித்த பெண்ணும், பலரால் தாக்கப்பட்டார். அதோடு இந்த அட்டைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், குறித்த நாளிதழுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது. «உற்றுப் பார்க்காதீர்கள், நாங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்» என்பதே அந்த அட்டைப்படத்தின் வாசகமாகவும் இருந்தது. இந்நிலையிலேயே இது ஆபாச புகைப்படம் அல்ல. தாய்ப்பாலூட்டும் புகைப்படம். இது உங்கள் ஆபாசமாக தெரிந்தால், அது உங்கள் பார்வையில் இருக்கிறது. இதே புகைப்படம் இன்னொருவருக்கு ஓவியமாகவும் இருக்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்