இந்தியா
Typography

“சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பண வைப்பு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் வைப்பு செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் கிடையாது. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதுதொடர்பாக முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுவிட்சர்லாந்து உள்நாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டு அரசு பல நாடுகளுடன் தகவல் வெளிப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. 2019 ஜனவரி முதல் தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன். சட்ட விரோதமாக யார் முதலீடு செய்தாலும் அவர்கள் மீது இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்