இந்தியா
Typography

மாநில அரசுகள் இடைக்கால டி.ஜி.பி.களை நியமனம் செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாநில அரசுகள் டி.ஜி.பி.களை நேரடியாக நியமனம் செய்யக்கூடாது என்று பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பணியமர்த்துவதாகவும், இதனால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறு கேட்டு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டி.ஜி.பி.க்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும் என்றும், யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை மாநில அரசு டி.ஜி.பி.யாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

மேலும் இடைக்கால டி.ஜி.பி.யாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது என்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகளை டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்