இந்தியா
Typography

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா? அல்லது மாநில அரசுக்கு அதிக அதிகாரமா? என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. 

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* துணை நிலை ஆளுநர்களை விட யூனியன் பிரதேச அரசுகளுக்கே அதிகாரம்; மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநருக்கு தெரியபடுத்தினால் மட்டும் போதும் - நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சிக்ரி ஒத்த கருத்தை தெரிவித்துள்ளனர்

* டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூட்டானது" - உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

* மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

* அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை, துணை நிலை கவர்னருக்கு தெரிவிக்கலாம். ஒப்புதல் பெற தேவையில்லை. ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. இதற்கு அரசியல் சாசனம் அனுமதி வழங்கவில்லை.

* அரசிற்கு, அவர் தடையாக இருக்கக்கூடாது. அனைத்து விவகாரங்களையும் ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பக்கூடாது. 9 நீதிபதிகள் தீர்ப்புப்படி டில்லி முழு மாநில அந்தஸ்து பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்