இந்தியா

‘கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. நான் எப்போது வேண்டுமானாலும் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்.’ என்று அம்மாநில மாநில முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார். 

பெங்களூரு அருகே உள்ள சேஷாத்திரி புரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் பேசியுள்ளதாவது, “கர்நாடக தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு பல நன்மை தரும் திட்டங்களை தர வாக்குறுதி அளித்தேன். மக்களும் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனர், ஆனால் நான் முதல்வராக இருப்பதில் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வராக இருக்க விரும்பாததால் எந்த நிமிடமும் நான் பதவி விலக தயார். என் கட்சிக்கு பெரும்பான்மை உருவாக்க முடியும் என்று அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது.” என்றுள்ளார்.