இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை உத்தரபிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்த பிரதமர் நரேந்திர மோடி, “முஸ்லிம் ஆண்களுக்காக மட்டும் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறதா?” என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். 

மோடி பேசியுள்ளதாவது, “நான் செய்தித்தாளில் ஒரு செய்தியை படித்தேன். அதில், ‘காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதுதொடர்பான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடக்கிறது. இந்த செய்தி எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஏனெனில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நாட்டில் அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் முதல் அதிகாரம் முஸ்லிம்களுக்கு உண்டு என்று கூறியிருந்தார். ஆனால், நான் கேட்க விரும்புவது ஒன்றுதான்.

காங்கிரஸ் கட்சி முஸ்லிம் ஆண்களுக்கான கட்சி மட்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், அந்த கட்சியின் நிலை முத்தலாக் கொள்கையில் வெளியே தெரிந்து விட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அவையை முடக்கும் வேலையில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் உரிமை எங்கு அளிக்கப்படுகிறது? இதுதொடர்பான மசோதாவை நிறைவேற்ற முற்பட்டால் அதை தடுக்கிறார்கள். நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். மோடிக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ளன. அதற்கு முன்னதாக முத்தலாக் மற்றும் நிக்காஹல்லலாவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களது எண்ணத்தை கேளுங்கள். அதன்பின் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலை தெரிவிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஒருபுறம் கொண்டு வந்த வண்ணம் உள்ளது. மறுபுறம் காங்கிரஸ் போன்ற கட்சியினர் ஒன்றிணைந்து பெண்கள் வாழ்க்கையை, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் வாழ்க்கையை பிரச்னைக்கு உள்ளாக்குகிறார்கள்.

இதற்கு முன் இந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்ப்பதை கூட விரும்பாதவர்கள். இப்போது மோடி, மோடி என்று எனக்கு எதிராக ஒன்றிணைந்து கோஷம் எழுப்புகிறார்கள். ஜாமீனில் வெளிவந்து இருக்கும் இதுபோன்ற தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உங்கள் முன்னேற்றத்தை தடுக்க பார்க்கிறார்கள்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.