இந்தியா

மாநிலங்களவையில், உறுப்பினர்கள் 22 இந்திய மொழிகளில் பேசலாம் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் ஏற்கனவே, தமிழ், அசாமி, வங்கம், குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது உள்ளிட்ட, 17 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டது. உறுப்பினர்கள், இந்த, 17 மொழிகளில், ஒன்றில் பேசினால், அதை பிற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும் வகையில், மொழிமாற்றம் செய்து அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக, தோக்ரி, காஷ்மீரி, கொங்கணி, சாந்தாலி, சிந்தி ஆகிய ஐந்து மொழிகளுக்கு, மொழி மாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 'புதிதாக சேர்க்கப்பட்ட ஐந்து மொழிகள் உட்பட, 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில், மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசலாம்' என வெங்கையா நாயுடு நேற்று புதன்கிழமை அறிவித்தார்.

இருப்பினும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் பேச விரும்பினால், மாநிலங்களவைச் செயலகத்தில், முன்னரே தெரிவிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

நல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.