இந்தியா

லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசின் தாமதத்தை கண்டித்து எதிர்வரும் அக்டோபர் 2ஆந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். 

நாட்டில் இலஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது.

இலஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சட்ட மசோதா கடந்த 2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி கையெழுத்திட்டு சட்டமாக்கினார். ஆனால், இதுநாள் வரையில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.

இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வராததை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:- ஊழலை தடுக்கும் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை. லோக்பால் அமைப்பை உருவாக்க ஏற்படும் தாமதத்திற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது. இந்த விஷயத்தில் கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

உடனே லோக்பால் அமைப்பை உருவாக்கி, லோக் பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறேன். மகாத்மா காந்தி பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2ஆந் தேதி முதல் எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளேன். ஊழல் இல்லா தேசத்தை உருவாக்க எனது போராட்டத்துடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.