இந்தியா

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் நடிகர் விஜய் நேரில் கேட்டறிந்தார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 27ஆந் தேதி இரவு அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். இது ஆஸ்பத்திரியின் வெளியே திரண்டிருந்த தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கேட்டறிந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிய, நடிகர் விஜய் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆணையை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும். இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் புதிய கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக இரண்டாம் கட்ட லாக்டவுனை தொடங்கியுள்ளது.

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.