இந்தியா
Typography

‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதால் அரசுக்கு இழப்பு ஏதும் கிடையாது. நாட்டிற்குதான் இழப்பு’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் அவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது: “மக்கள் பிரச்னைகளை லோக்சபா, ராஜ்யசபாவில் எடுத்துரைக்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. ஏழை மக்களின் குரலை பிரதிபலிப்பதாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும். எனவே நாடாளுமன்றம் செயல்பட உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். கூச்சல், குழப்பம், அமளி ஏற்படுத்துவதால் இழப்பு அரசுக்கு அல்ல, நாட்டிற்கு தான்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS