இந்தியா

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ள தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 2016 டிசம்பர் 1ஆம் தேதி முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். மூச்சு விடுவதை எளிதாக்க டிரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, கடந்த 2017 ஜனவரி 4ஆம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலினே மேற்கொண்டார்.

சுமார் 19 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த ஜூலை 27ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 11 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த 7ஆம் தேதி காலமானார். கருணாநிதி மறைவையடுத்து தி.மு.க.வுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய அண்ணா, 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் தி.மு.க போட்டியிட்டு வருகிறது. அப்போது தி.மு.க.வில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் இருந்த அண்ணா 1969இல் காலமானார்.

அதன்பிறகு தி.மு.க.வில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. 49 ஆண்டுகள் தலைவராக இருந்து தி.மு.க.வை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக நடத்தி வந்த கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார்.

இதையடுத்து, செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். இது தொடர்பாக தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘’மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டமும், படத் திறப்பு விழாவும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விரைவில் நடக்க உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு தி.மு.க தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்’’ என்றார்.

ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை. ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் இருந்த 11 நாட்களும் அழகிரி, ஸ்டாலின் இருவரும் பலமுறை பேசியுள்ளனர். அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அழகிரிக்கும் தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.