இந்தியா
Typography

மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. கோரிக்கை விடுத்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி கடந்த 07ஆம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடந்த 08ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்த கருணாநிதியை கௌரவிக்கும் வகையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் நேற்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது:

“தி.மு.க. தலைவர் கருணாநிதி வலிமைமிக்க திராவிடரும், நாட்டின் உயர்ந்த அரசியல் தலைவரும் ஆவார். தனது 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில், ஏழைகள், அடித்தட்டு மக்கள், பின்தங்கியவர்களின் நலனுக்கு போராடியவர். மிகச்சிறந்த பேச்சாளர், திறமைமிக்க எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வாழ்வின் அனைத்து தடங்களிலும் முத்திரை பதித்த அவர், ஈடு இணை இல்லாதவர். தனது கடைசி மூச்சு வரை சமூக நீதிக்காக, மதச்சார்பின்மைக்காக, சுய மரியாதைக்காக போராடியவர். வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதினை வழங்கிட வேண்டும். அதுவே, அவரது முன்மாதிரியான மிகச்சிறந்த சேவைக்கு வழங்கிடும் உண்மையான மரியாதையாகும்.” என்றுள்ளார்.

இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் ஆமோதித்து வரவேற்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்