இந்தியா
Typography

“சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

ஒரு நாள் பயணமாக நேற்று சனிக்கிழமை மும்பை வந்த பிரதமர் மோடி, இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்-பாம்பேயின் (ஐஐடி-பாம்பே) 56வது வருடாந்திர பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ஐஐடி.க்கள் உலக அளவில் இந்தியாவின் முத்திரையை பதித்துள்ளதாகவும், உலகிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப மனிதவளம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு உதவியிருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளை இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புகள் இல்லாவிட்டால் நீங்கள் தேக்கமடைந்து விடுவீர்கள். இது வெறும் அரசின் முயற்சி மட்டுமல்ல. கல்வி கற்கும் இளைஞர்களின் மனதில் இருந்து புதிய யோசனைகள் உருவாக வேண்டும். அரசு கட்டிடங்களில் இருந்தோ, ஆடம்பரமான அலுவலகங்களில் இருந்தோ அல்ல.

ஐஐடி.கள் குறித்தும் ஐஐடி பட்டதாரிகளின் சாதனைகள் குறித்தும் நாடு பெருமைப்படுகிறது. ஐஐடி.க்களின் வெற்றியால்தான் நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகள் உருவாகி உள்ளன. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஐஐடி மாணவர்கள் பிரதிபலிக்கின்றனர். சிறந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐஐடி-பாம்பேக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்