இந்தியா
Typography

மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி (வயது 89) உடல் நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை காலை காலமானார். 

2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சோம்நாத் சட்டர்ஜி மக்களவை சபாநாயகராக இருந்தவர். அவர் சிறுநீரகம் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார். மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், சோம்நாத் சட்டர்ஜி இன்று காலை காலமானார்

சோம்நாத் சட்டர்ஜி, மக்களவை உறுப்பினராக 10 முறை இருந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 2008ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்