இந்தியா

கலைஞர் மு.கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தனது பக்கமே உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

மறைந்த கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்றும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “எங்க அப்பா கிட்ட எனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறேன். அது என்ன ஆதங்கம் என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விசுவாசிகள் என் கூடத்தான் உள்ளார்கள். இதற்கான பதிலை பின்னால் சொல்லும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானதுதான். தி.மு.க. செயற்குழு தொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியாது. நான் தற்போது கட்சியில் இல்லை.” என்றுள்ளார்.