இந்தியா

இந்தியா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது. காலை 7.15 மணியளவில் செங்கோட்டைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 7.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவகவுடா, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின் நட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி தனது உரையை துவங்கினார்.

பிரதமர் மோடி கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தேசம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
* நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது.
* பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளோம்
* உலகின் 6-வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
* நாடு புதிய வளர்ச்சிகளை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும்.
*இந்தியா சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் என் வீர வரணக்கம்.”
இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

-தினத்தந்தி