இந்தியா
Typography

கொட்டி தீர்க்கும் கனமழையால் கேரளா மாநிலமே வெள்ளக் காடாக மாறியுள்ளது. மழை மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளனர். இன்று அதிகாலை பாலக்காடு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் மண்சரிவில் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் மிக அதிக அளவிலான கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆர்.பி.ஐ., தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொச்சியில் பல இடங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நாளாக கேரளா செல்லும் ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் புனலூர், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கர்நாடகாவில் இருந்து கேரளா செல்லும் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குமரி வழியாக கேரளா செல்லும் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்