இந்தியா
Typography

தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ஆம் திகதி நடைபெறும் என பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நல குறைவு மற்றும் வயது முதிர்வால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி காலமானார். அவரது உடல் மெரீனாவில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைவை அடுத்து அந்த பதவி காலியானது. கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

இந்நிலையில், தி.மு.க.வின் தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் ஆகஸ்டு 28ஆம் திகதி நடைபெறும் என கட்சியின் பொது செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 26ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பெற்று கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS