இந்தியா
Typography

இலங்கைக் கடற்பரப்பில்,இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றில் தமிழக மீனவர்கள் படகு மோதியதில் மீனவர்களின் படகு நடுக்கடலில் முழ்கியது. இதன் காரணமாக கடலில் உயிருக்கு போராடித் தத்தளித்த ஆறு மீனவர்களையும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விரைவு ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று முதலுதவிகள் வழங்கிய பின், காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மீனவர்கள், நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறை காற்றில் அடித்துச் செல்லப்பட்ட தாலேயே, ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதி முழ்கியதும், காற்றின் காரணமாகவே எல்லை தாண்டி வந்ததும், தெரிய வந்ததையடுத்து அவர்கள் மீது எல்லை தாண்டிய வழக்குப் பதிவு செய்யாமல், உயிரை காப்பாற்றி கொள்ளவே இலங்கை பகுதிக்கு வந்ததாக, பொலிஸாரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்