இந்தியா

இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை ஏன் நியமிக்கவில்லை என்று வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

வாட்ஸ்அப் நிறுவனம், ஏன் இன்னும், இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கோரி வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு, வாட்ஸ் நிறுவனத்தை வலியுறுத்தி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப அதிகாரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வாட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ் அப் தலைமை அதிகாரியிடம் வலியுறுத்தி இருந்தார்.