இந்தியா

“மோடியின் புதிய இந்தியாவில் ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது; அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் கிராமத்தில் கடந்த ஆண்டு தலித்துகளுக்கும், பேஷ்வா சமூகத்தினரும் இடையே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 5 பேரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், மத்திய அரசை விமர்சித்து, ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: “புதிய இந்தியாவில் ஒரே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. அது, ஆர்எஸ்எஸ் அமைப்பு. இதர அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடி விடுங்கள். அனைத்து சமூக செயல்பாட்டாளர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். எதிர்ப்பு தெரிவித்தால் சுட்டுவிடுங்கள். இதுதான் புதிய இந்தியா” என்று பதிவிட்டுள்ளார்.