இந்தியா
Typography

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

2017இல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் திருமுருகன் காந்தி பேசுகையில், 'பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போராட்டத்தைபோல இங்கும் நடைபெறும்' என்று கூறியதாக குற்றஞ்சாட்டிய போலீசார், திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 2017ஆம் ஆண்டில் திருமுருகன் காந்தி பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்த நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி சிறையில் இருந்துள்ளார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த ஒருவரை பொதுக்கூட்டத்தில் பேசியதாக குறிப்பிட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் அவர் மீது போலீசார் வழக்கு போட்டது. எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் செப்டம்பர் 14ஆம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் இதுபற்றி கோர்ட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருமுருகன் காந்தி மீது மொத்தம் 34 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்