இந்தியா
Typography

நாட்டில் வன்முறைகளை ஏற்படுத்தி மத்தியை ஆளும் பா.ஜ.க. அரசைக் கவிழ்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மகராஷ்ரா மாநிலம் புனே கோரேகான் பகுதியில் கடந்த ஜனவரியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கவிஞர் வராவரராவ் உள்ளிட்ட 5 பேரை கைது போலீசார் செய்தனர்.

வன்முறையாளர்களை கைது செய்ததை ஆதரித்து, உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “நக்சலைட்டுகள் காடுகளிலும் மலைகளிலும் மறைந்து பதுங்கி வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது நகரங்களில் சகல வசதிகளுடன் உலா வருகின்றனர். இந்தியாவில் 126 மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் இருந்தது. தற்போது 12 மாவட்டங்களாக குறைந்துள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS