இந்தியா
Typography

‘அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் உள்ளது. அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது.’ என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “126 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு அணை உடைந்தது இயற்கை, அதனுடன் அ.தி.மு.க. ஆட்சியை ஒப்பிட கூடாது. அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைத்துள்ள அ.தி.மு.க. எனும் கோட்டை வலுவாக உள்ளது. அ.தி.மு.க, கரிகாலன் கட்டிய கல்லணை போன்று பலமாக இருக்கிறது. யார் அழைத்தாலும் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ விலைபோக மாட்டார்கள்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்