இந்தியா
Typography

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயாக அதிகரிக்கும் என்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். 

ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அமராவதியில், செய்தியாளர்களிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: “நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பலமே காரணம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி காரமணமல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை விரைவில் லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும். இதேபோல, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும்.” என்றுள்ளார்.

இந்நிலையில், ‘பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைக்கும் பொருட்டு, இவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும். எனவே, பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS