இந்தியா

விவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டினார். 

காங்., மூத்த தலைவர் கபில் சிபால் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மன்மோகன் சிங் பேசியதாவது:

“ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜி.எஸ்.டி., அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் தொழில் துறையில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்னை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் தலைமையிலான ஆட்சி குறித்து கபில் சிபாலின் புத்தகம் விளக்குகிறது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வெற்ற பா.ஜ., அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது.” என்றுள்ளார்.