இந்தியா
Typography

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதுகுறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைசெயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்வது பற்றி அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.

7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து அமைச்சரவையில் ஆலோசனை நடத்தப்பட்டது. 7 பேர் விடுதலை பற்றி சட்டப்பிரிவு 161-இன் கீழ் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணி நடைப்பெற்றது.

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது: “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161-இன் கீழ் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது. சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டவும், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு அமைச்சரவை பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.“ என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS