இந்தியா
Typography

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர், இன்றைக்கு அவை நிகழ்வுகளில் பங்கேற்காதவர்கள் சஸ்பெண்ட் இல்லை என்று திமுக கொறடா அறிவித்துள்ளார். 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் அவையின் அடுத்த 7 வேலைநாட்கள் பங்கேற்க முடியாது .. நாளை நடக்க உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் இருந்து 30 ம் தேதி நடக்க உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை விவாதம் வரை பங்கேற்க முடியாது,  22 ம் தேதி முதல்வரின் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்காத திமுக உறுப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதி, பூங்கோதை,கே.என் நேரு, ஒரத்தநாடு ராமச்சந்திரன்,ஐ.பெரியசாமி, Mrk. பன்னீர்செல்வம் இந்த ஆறு நபர்கள் சஸ்பெண்ட் செய்யபடவில்லை என தகவல்.இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடைப்பெற்றது. ஆனால். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்