இந்தியா

வி.கே.சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, “தினகரனையோ, சசிகலாவையோ அவர்களை சார்ந்தவர்களையோ மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எதிர்காலத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். அவரை நாங்கள் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. அது நடக்காத ஒன்று. டி.டி.வி.தினகரன் பின்னால் 2 சதவீதம் பேர் தான் இருக்கின்றனர்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.