இந்தியா
Typography

‘திவால்’ சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் முயற்சிகளை முன்னெடுப்பது எளிதாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டை துவங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டில் வரி கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். வரி அமைப்பை மேலும் செயல்திறன் மிக்கது ஆகவும், வெளிப்படை தன்மை கொண்டது ஆகவும் மாற்ற முயற்சித்து வருகிறோம். திவால் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிதாகியுள்ளது. வங்கி அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன. ஆற்றல், கொள்கை, செயல்திறன் ஆகியவை வளர்ச்சியின் மூலங்களாக திகழ்கின்றன. நாட்டின் முன்னேற்றத்துக்கு வளம், கொள்கை, செயல்பாடு ஆகியவையே தாரக மந்திரமாக உள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS