இந்தியா
Typography

சென்னை விமான நிலையத்தில் வைத்து ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபாலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

புனே செல்ல சென்னை விமான நிலையம் வந்த ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார், காலை 07.00 மணி முதல் ஒரு மணி நேர விசாரணை நடத்தியபின் கைது செய்தார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக, ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்