இந்தியா
Typography

புதுவை மாநில முதல்வருடன் சுமுகமான உறவைக்  கடைப்பிடித்து பல்வேறு விதமான பணிகளை ஜரூராகக் கவனித்து வருகிறார் புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி. 

புதுவை மாநில ஆளுநராக பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்களின் குறைகளை வாரா வாரம் கேட்டு வருகிறார் கிரண்பேடி. அதோடு, நீர் நிலைகள், சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும்  பணிகளிலும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார்.தூய்மை இந்தியா எனும் பிரதமரின் திட்டத்தை புதுவையில் முழுவதுமாக அரங்கேற்றும் முழு முயற்சியில் கிரண்பேடி ஈடுபட்டு உள்ளார்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் இருவருக்கும் பனிப்போர் நடைப்பெற்று வரும் நிலையில், புதுவையும் யூனியன் பிரதேசம் என்பதால், இங்கும் முதல்வருக்கும், ஆளுநருக்கும் மோதல் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில், புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி இருவருக்குள்ளும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இதுவரை ஏற்படவில்லை.  

இதே மனப்போக்குடன் புதுவை மாநிலம் காரைக்காலில்: முதல் நாள் ஆய்வை தொடங்கி உள்ளார்  துணை நிலை ஆளுனர் கிரேண்பேடி. இன்று தொடங்கி 20ம் தேதி வரை அவர் காரைக்காலில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிடுகிறார். பொதுமக்களை சந்தித்தும் குறைகள் கேட்டறிய வுள்ளார். அரசுத் துறை அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவுள்ளது.மிக முக்கியமாக தூய்மை இந்தியாத் திட்டமும் முழு வீச்சுடன் நடைப்பெற உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்