இந்தியா
Typography

அசாமைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவையில் சரக்கு- சேவை வரி மசோதா முழு மனதுடன் நிறைவேற்றப்பட்டது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாடு முழுவதூக்குமான ஒரே சரக்கு- சேவை வரி விதிக்கும்படியான மசோதா தாக்கலாகி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. ஆனால், முன்னதாக நாடு முழுவதும் குறைந்தது 15 சட்டப்பேரவையிலாவது இந்த மசோதாவுக்கு முழு ஒப்புதல் கிடைக்க வேண்டும்.  

நாடாளுமன்றத்தின் தமிழக உறுப்பினர்கள் யாரும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்கிற நேரத்தில், அசாம் சட்டப்பேரவையில் சரக்கு-சேவை வரி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.இதையடுத்து பீகார் சட்டப்பேரவையில் சரக்கு-சேவை வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்