இந்தியா
Typography

மழை வெள்ளத்தின் போது சென்னை நீரில் மூழ்கிய காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்து உள்ளது. கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நாடாளுமன்ற நிலைக்குழு,தமிழகத்துக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டது.

அந்த ஆய்வுகளின் அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்து உள்ளது. அதில் மழை வெள்ளத்தின்போது சுமார் 470 பேர் உயிரிழந்ததாக   தெரியவந்துள்ளது. அடையாறு ஆற்றில் 839 மீட்டர் தூரத்துக்கு 4046 வீடுகள், காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் 117 கட்டிடங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே தடவையில் 29 ஆயிரம் கன அடி நீர் திறப்பு ஆகியவைதான் சென்னை மூழ்க காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.4.92 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கியதாகவும், 12 ஆயிரம் கால்நடைகள்உயிரிழந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்