இந்தியா
Typography

தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீர் இன்னமும் தமிழகத்துக்கு திறந்துவிடப் படவில்லை.காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியையும் செய்ய முடியாமல் போன நிலையில், சம்பா பயிரையும் இப்போது பயிரிட முடியுமா என்று சந்தேகம் கொள்ளும் வகையில், கர்நாடக முதல்வர் சித்தாராமையா ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், இந்த வருடம் கர்நாடகாவுக்கு பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவ மழை 10 சதவிகிதம் கம்மியாகவே பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, தமிழகத்துக்கு குடித்தண்ணீர் மட்டுமே தர முடியும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, அடுத்த வருடம் தென் மேற்குப் பருவமழை 10 சதவிகிதம் அதிகமாகவே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அடுத்த வருடத்துக்கு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடுவோம் என்று சித்தராமையா கடிதத்தில் எழுதியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்