இந்தியா
Typography

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் இருந்து 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம் எல் ஏக்கள், இன்று தலைமைச் செயலகத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்தி வருகின்றனர். 

நேற்று முன்தினம் திமுக உறுப்பினர்களில் 79 உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க 7 நாட்கள் தடை விதித்து, சபாநாயகர் தனபால் உத்தரவுப் பிறப்பித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தினுள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். இன்று போட்டி சட்டப்பேரவை நடத்தி வருகின்றனர்.

ஸ்டாலின் தலைமையில், துரை முருகன் சபாநாயகராக நடிக்க திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தினுள் நடப்பதை வெளியில் நடத்தும் போட்டி சட்டப்பேரவையில் நடித்துக் காண்பித்து வருகின்றனர். இதுவே போட்டி சட்டப்பேரவை என்பது இவ்வேளையில் குறிப்பிட்டது தக்கது.போலீசார்  பாதுகாப்புக்குக் குவிந்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்