இந்தியா

‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். 

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைக்குள் சர்கார் சிக்கியது. நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வந்ததைத் தொடர்ந்து பல இடங்களில் அதுபோன்ற போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

படம் வெளியான பிறகு மேலும் பல எதிர்க் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் வருகின்றன.

அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ ஆகியோர் சர்கார் படத்தில் இலவச திட்டங்கள் பற்றி கூறப்படும் கருத்தை அப்பட்டமாக எதிர்த்துள்ளனர். அதுபோன்ற காட்சிகளை படக்குழுவினரே தாமாக முன்வந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது அந்தப் படம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நேற்று பிற்பகலில் சந்தித்து சர்கார் படத்துக்கு எதிராக வழக்கு தொடருவது பற்றி பேசினார்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் காசி திரையரங்கம் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு வைக்கப்பட்டு இருந்த விஜய் பேனரையும் கிழித்து எறிந்தனர். இதுபோல கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கடலூர், விழுப்புரம், ஊட்டி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.வினர் சிலர் விஜய் பட பேனர்களை கிழித்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

விழுப்புரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தியேட்டருக்கு பூட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டம் காரணமாக சில இடங்களில் சர்கார் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே எதிர்ப்பு வலுப்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சர்ச்சை காட்சிகள் நீக்கப்படலாம் என்றும், இதற்காக மீண்டும் தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தால், அந்த படத்தை மறுதணிக்கை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று தணிக்கை குழு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:- “சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த பிரச்சினையில் படத்தின தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் சுமுகமான முடிவுக்கு வந்து இருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.” இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- “சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடும்படி படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். பிரச்சினைக்குரிய காட்சிகள் தேவை இல்லை என்பதுதான் தியேட்டர் அதிபர்களின் நிலைப்பாடு. தயாரிப்பு தரப்பிலும் அந்த காட்சிகளை நீக்க சம்மதித்து இருக்கிறார்கள்.

அவர்கள் நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நீக்கவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் நாளை சென்னையில் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுப்போம். சர்ச்சை காட்சிகளை நீக்குவதுதான் சிறந்தது என்று நினைக்கிறோம்.

இலவசம் கொடுக்கக்கூடாது என்றும், அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை தீயில் அள்ளிப்போட்டு எரிப்பது போன்றும் உள்ள காட்சியை நீக்க வேண்டும். இந்த காட்சி அரசின் இலவச பொருட்களை வாங்கும் மக்களை புண்படுத்துவதுபோல் உள்ளது. அதனால் அந்த காட்சியை நீக்க தயாரிப்பாளர் தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்கள் மறுப்பு தெரிவித்தால் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்று நாளை முடிவு செய்வோம்.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.