இந்தியா
Typography

தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சர்கார் படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலவசங்களை அவமதிப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரி்ல் தெரிவித்துள்ளதாவது: “சர்க்கார் படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். தணிக்கை குழு தணி்க்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு . இத்தகைய சட்டவிரோதமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்