இந்தியா
Typography

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நடிகரும், எழுத்தாளருமான பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 2017ம் ஆண்டு இந்துத்துவ அடிப்படை வாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை அடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பிலான தனது கண்டனக் கருத்துக்களை அதிகமாக பதிவு செய்து வந்தார். அதோடு பாஜக மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பல நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்தும் வந்திருந்தார். இந்நிலையிலேயே மக்களின் குரலாக பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்