இந்தியா
Typography

உலக வங்கியின் தலைவர் பதவிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த இந்திரா நூயி என்பவர் தேர்வு செய்யப் படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெப்வரி மாதம் முதல் உலக வங்கியின் தற்போதைய தலைவர் ஜிம் யோங் கிம் கடமையாற்றி அதன் பின் விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதை அடுத்து உலக வங்கியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் புதிய தலைவர் தேர்வாகலாம் என்ற நிலையும் ஏற்பட்டது. ஏனெனில் உலக வங்கியின் மிகப் பெரிய பங்குதாரராக அமெரிக்கா விளங்குவதுடன் இதுவரை அமெரிக்கர்களே இதன் தலைமைப் பதவியை நிர்ணையித்தும் வந்தனர். இந்நிலையில் டிரம்பின் மகள் இவாங்கா நேரடியாகப் பதவிக்கு வரலாம் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவரோ இந்திரா நூயியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திரா நூயி பெப்ஸிக்கோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமைச் செயலதிகாரியாகக் கடமையாற்றி புகழ் பெற்றதுடன் 2018 ஆகஸ்ட்டில் தன்னுடையை இந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். 12 வருடங்களாக பெப்ஸிக்கோ நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றி அந்நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற இவர் உலக வங்கியின் தலைவராகப் பதவி வகிக்க மிகவும் தகுதியானவர் தான் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்