இந்தியா
Typography

தனிநபர் உத்தரவாதம், பிணைத்தொகை உத்தரவாதம், என்பவற்றினூடு சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட, சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆயினும் அவர்களை சிறையில் அடைக்க மறுத்துவிட்ட நீதிபதி, இன்று 18ந் திகதி, எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனும், நிபந்தனைகளின் அடிப்படையில் இருவரையும் விடுவித்தார்.
,
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுக்கு ஜாமீன் வழங்குமாறு கோரினர். 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதம் சமர்பித்தமையால் இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்