இந்தியா
Typography

இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்திருப்பதாகத் தெரிய வருகிறது.

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பின் மத்தியிலும், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தொடர்ந்து நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜ்யசபாவில் இம்மசோதா மீதான விவாதத்தின் போது திமுக உறுப்பினர் கனிமொழி, 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே, இச் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளதாக அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்