இந்தியா
Typography

பீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியும், 14 பேருக்கும் அதிகமானவர்கள் மோசமான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

ஞாயிறு அதிகாலை வைஷாலி மாவட்டம் சஹதாய் புசர்க் என்ற இடத்திலுள்ள ஜோக்பானி-ஆனந்த விஹார் டேர்மினலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. அதிகாலை 3:58 இற்கு இந்த அதிவேக ரயில் விபத்தில் சிக்கிய போது முதலில் 3 பெட்டிகளும் பின்னர் வரிசையாக 11 பெட்டிகளும் தடம் மாறி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பெட்டிகளின் கீழேயும் நிறைய மக்கள் சிக்கியிருக்க வாய்ப்பு இருப்பதால் அங்கு மீட்புப் பணி மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

இவ்விபத்தில் உயிரிழந்த மக்களது குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் வழங்கப் படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்