இந்தியா
Typography

நரேந்திரமோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக சமூக சேகவர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க வேண்டும், மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கைகளோடு, மகாராஷ்ட்ரா மாநிலத்தின், ரலேகான் சித்தியில் கடந்த 30 ஆம் உண்ணாவிரதப் பொராட்டமொன்றினைத் தொடங்கியுள்ளார் அன்னா ஹசாரே.

அன்னா ஹசாரேவின் சொந்தக் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள இப் போராட்டத்துக்கு ஆதரவாக , அவரது கிராமத்தில் சாலை மறியல் போராட்டமும் நடந்தவேளை, அன்னா ஹசாரே உரையாற்றினார். அவர் தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், நிறைவேற்றுவதாக சொன்ன வாக்குறுதிகளை, நரேந்திர மோடி அரசு நிறைவேற்றத் தவறினால், நாட்டின் நலனுக்குப் பணியாற்றுவதற்காக, தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திருப்பிக் கொடுக்கவுள்ளதாகவும், தனது உயிருக்கு ஏதும் நேர்ந்தால் அதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு எனவும் கூறியிருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்