இந்தியா

மத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்தது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் குறிப்பில் கருத்துத் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.

இந்த இடைக்கால பட்ஜெட், மத்திய தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கவர்ச்சிகரமாக இருப்பதுபோல தோன்றினாலும், அவர்களுக்கு கிடைப்பதாக கூறப்பட்டிருக்கும் மானியங்கள் மிகவும் குறைவானது எனவும், இந்த பட்ஜெட்டின் குறைபாட்டினை, மிக எளிதாக பொருளியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.