இந்தியா

துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளமை, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை செயலகத்தில் காலியாகவுள்ளன, துப்புரவு பணியாளர் பணிக்குத் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, எழுதப்படிக்க தெரிந்தால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல், எம்பிஏ மற்றும் கலை அறிவியல் படிப்புகளை படித்த பட்டதாரிகள், டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது.

வெற்றிடமாகவுள்ள 14 துப்புரவு பணியாளர் பணிக்காக சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், தகுதி உடைய, 3 ஆயிரத்து 930 பேரை நேர்காணலுக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அறியவருகிறது. தமிழகத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நிலை குறித்த அதிர்ச்சியான வெளிப்பாடாக இது அமைவதாகக் கூறப்படுகிறது.