இந்தியா
Typography

திமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடித் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

79 திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கத்  தடை விதித்து கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் சபாநாயகர் தனபால் உத்தரவுப் பிறப்பித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சட்டப்பேரவையும், நீதி மன்றமும் ஜனநாயகத்தின் இரு தூண்கள் என்பதால், சட்டத்தை ஆய்வு செய்யாமல் சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சபாநாயகருக்கு இதுக் குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி திமுக தொடர்ந்த வழக்கில் உத்தரவுப் பிறப்பித்து உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு வழக்கு விசாரணையை வருகிற செப்டெம்பர் மாதம் 1ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்