இந்தியா
Typography

மக்களவையில் பிரதமராகத் தனது கடைசி உரையை அண்மையில் நரேந்திர மோடி ஆற்றினார். இதன்போது அவர் 55 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் செய்யாத பல நற்பணிகளை 55 மாதங்களில் பாஜக தனது ஆட்சியில் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிவித்தார்.

காங்கிரஸின் 55 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் 38% வீதமான பகுதிகளே முழுமையான சுகாதார வசதியைப் பெற்றிருந்ததாகவும் ஆனால் பாஜக 55 மாதங்களில் இந்தியாவின் 98% வீதமான பகுதிகளுக்கு முழுமையான சுகாதார வசதியை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 11 ஆவது உலக வல்லரசாக இருந்த இந்தியா தமது ஆட்சியில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ள போதும் காங்கிரஸ் திருப்தி அடையாதது ஏன் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இதுதவிர இந்திய விமானப்படை மேலும் வலிமை பெற்று விடக்கூடாது என்பதற்காகத் தான் இப்போதும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கூச்சலிடுவதாகவும் மோடி சுட்டிக் காட்டினார். இதுவரை தமது ஆட்சியில் காங்கிரஸால் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலடியாக மோடியின் இந்தக் கடைசி உரை மிக ஆவேசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS