இந்தியா
Typography

காஷ்மீரின் புல்மாவா பகுதில் இந்திய இராணுவ வாகனப் பேரணி மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 சீஆர்பிஎஃப் இராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர்.

இந்தியா பாகிஸ்தான் நல்லுறவில் அதிர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு காரணமாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் அஜய் பிசாரியா டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு உடனடி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்த புல்மாவா தாக்குதல் தொடர்பில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளதுடன் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ராஜ்நாத்சிங், இவ்வாறு தெரிவித்தார்.

'சர்வதேசத்தின் வேண்டுகோள்களை மதியாது தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப் படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனே இந்தியா நிறைவேற்றும். மேலும் மிக மோசமான புல்மாவா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் உரிய பதிலடியை நிச்சயம் எதிர்நோக்குவர். பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான வர்த்தகத்தில் இனிமேல் எந்தவொரு சலுகையும் வழங்கப் படாது. பாகிஸ்தானுக்கு அளிக்கப் பட்ட வர்த்தக அந்தஸ்து மீளப் பெறப்படுகின்றது.' என்றார்.

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் உட்பட இரு தமிழக வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்