இந்தியா
Typography

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் நராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி வகித்து வருகிறது. இந்நிலையில் வரும் 24ம் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில், புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அக்கூட்டத்தில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் நடந்த என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.பின் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி தெரிவிக்கையில், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக, சிறந்த எதிர்கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் செயல்படும் என தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS